அடுத்த ஆண்டு ஏப்ரலில் டீசல் நானோ கார்: டாடா திட்டம்?

நானோ கார்
அடுத்த ஆண்டு ஏப்ரலில் டீசல் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் டீசல் நானோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லிட்டருக்கு 30 கிமீக்கு மேல் மைலேஜ் தரும் என்பதே காரணம்.

டீசல் நானோவுக்கான எஞ்சினை பிரபல ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாஷ் உருவாக்கி வருகிறது. ஆனால், டீசல் நானோ குறித்து டாடா மோட்டார்ஸ் இதுவரை எந்தவொரு தகவலையும் உறுதிப்படு்த்த வில்லை.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் டீசல் நானோ காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் நானோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 800 சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டீசல் நானோ வருவதற்கு முன்பு இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி) இயங்கும் நானோ காரை விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே சிஎன்ஜி நானோ மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Friday, August 17, 2012, 14:38 [IST]
English summary
Tata motors is planning to launch Diesel nano by next year April, sources said. The diesel nano will equip with 3 cylinder 800cc engine and it will give 30 kmpl mileage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+