ஜாகுவார் பிராண்டில் குறைந்த விலை கார்களை தயாரிக்க டாடா திட்டம்

Jagura XF
பிரிமியம் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் பிராண்டில் குறைந்த விலையில் புதிய சொகுசு கார்களை தயாரிக்க திட்டம் வைத்து இருப்பதாக டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் தற்போது டாடா வசம் இருக்கிறது. மேலும், இந்த நிறுவனங்களுக்கும் அதிக அளவில் டாடா முதலீடு செய்து வருகிறது. இதனால், இரு நிறுவனங்களும் தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.

இந்த நிலையில், ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் மார்க்கெட்டை வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை டாடா மேற்கொண்டுள்ளது. இதற்காக, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் குறைந்த விலை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மார்க்கெட்டிலும் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகளில் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தினால் நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதாகவும் டாடா கருதுகிறது. தவிர, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை இங்கு அசெம்பிளிங் செய்யும் வாய்ப்புகள் டாடாவிடம் உள்ளதால் பிற சொகுசு கார் தயாரிப்பாளர்களுக்கு எளிதில் போட்டியை கொடுக்க முடியும்.

அதேவேளை, மிகக்குறைந்த விலை சொகுசு கார்களை தயாரிக்கும் எண்ணம் இல்லை என்றும் ரத்தன் டாடா விளக்கமாக தெரிவித்துள்ளார். பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு போட்டியை கொடுக்கும் வகையில் ஜாகுவார் பிராண்டில் கார்களை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 25, 2012, 12:53 [IST]
English summary
Tata Motors is planning to build Jaguar cars to compete with the BMW 3 series of cars and position at the aspirational buyers of premium cars globally.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+