விரைவி்ல நானோ சிஎன்ஜி: டூ வீலர்களுக்கு ஆபத்தாம்!
தீபாவளிக்கு முன்னதாக இயற்கை எரிவாயுவில் செல்லும் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த சிஎன்ஜி நானோ காரின் எரிபொருள் செலவீனம் இருசக்கர வாகனத்துக்கு இணையாக இருக்கும் கூறப்படுகிறது.

இதனால், பெட்ரோல் நானோவை ஒப்பிடும்போது சிஎன்ஜி நானோ விலை 15 சதவீதம் கூடுதலாக இருக்குமாம். அதேவேளை, எரிபொருள் செலவீனம் பெட்ரோலைவிட மிகக் குறைவாக இருக்கும். அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு ஆகும் எரிபொருள் செலவீனத்துக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 17 லிட்டர் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் நகர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
சிஎன்ஜி சிலிண்டரால் நானோவின் எடை 710 கிலோவாக கூடியிருப்பதால், கூடுதல் தாங்கும் சக்திகொண்ட புதிய சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த புதிய சிஎன்ஜி நானோ விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம், நானோ விற்பனை முன்னேற்றம் ஏற்படும் என டாடா நம்பிக்கையுடன் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








