அமெரிக்காவில் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா ஆயத்தம்

உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையை டாடாவின் நானோ தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. மேலும், அண்டை நாட்டு மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ காரை அடுத்து ஐரோப்பிய, அமெரிக்க மார்க்கெட்டுகளிலும் அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தையும் தற்போது அந்த நிறுவனமே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நானோ காரை அமெரிக்க மார்க்கெட்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அறிமுகமாகும் நானோ கார் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டதாகவும், கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மெக்ஸிக்கோவிலிருந்து தயாரிக்கப்பட்டு 11750 டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் நிசான் வெர்சா கார்தான் தற்போது அமெரிக்காவின் மிகக் குறைந்த விலை கொண்ட கார்.
இந்த நிலையில், புதிய நானோவை 10,000 டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா குறிப்பிடுகையில்," அமெரிக்க மிகவும் வசீகரமான மார்க்கெட்டாக இருக்கிறது. 10,000 டாலர் விலை கொண்ட காருக்கு அங்கு நிச்சயம் அங்கீகாரம் பெறும் என நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








