பூட் ரூம் கொள்ளளவை அதிகரிக்க நானோவை ரீடிசைன் செய்யும் டாடா

டாடா நானோ
பூட் ரூமில் அதிக பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக நானோ காரை டாடா மோட்டார்ஸ் மறுவடிவமைப்பு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட்டிக் காரான நானோவில் பூட் ரூம் கொள்ளளவு குறித்து பேச முடியாது. இருப்பினும், குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ என எந்த பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் வகையில் நானோவின் பூட் ரூமின் கொள்ளளவு அதிகரிக்கப்பட உள்ளது.

இதனை சாத்தியப்பட வைப்பதற்காக நானோவின் அளவை சிறிதளவு கூட்டுவதற்கும் டாடா முடிவு செய்துள்ளது. இதற்காக, நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நானோவின் விலை சிறிது அதிகரிக்கப்பட வாய்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், இந்த தகவல்கள் குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க இயலாது என டாடா மோட்டார்ஸ் மறுத்துவிட்டது. இந்த நிலையில், சிஎன்ஜியில் இயங்கும் நானோ காரை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை டாடா முடுக்கி விட்டுள்ளது.

இதேபோன்று, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டீசல் நானோவை விரைந்து களமிறக்குவதற்கான பணிகளிலும் டாடா விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Wednesday, October 31, 2012, 11:17 [IST]
English summary
Tata Nano is being redesigned to add some boot space at the back of the vehicle, which will in turn make this cheapest car bit pricier.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+