மாதம் 5,000 சுமோ கோல்டு கார்களை விற்க டாடா இலக்கு

Tata Sumo Gold
புதிய எஞ்சின், கூடுதல் வசதிகளுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சுமோ கோல்டு மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, மாதம் 5,000 சுமோ கோல்டு கார்களை விற்க டாடா மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது.

மாநகரம் முதல் கிராமப்புற மார்க்கெட் வரை டாடா சுமோவுக்கு தனி மார்க்கெட் இருக்கிறது. அதிக இடவசதி, நிறைவான மைலேஜ் என வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமின்ற குறைந்த விலையில் குடும்பத்திற்கு ஏற்ற மாட்டுப்பெண்ணாகவும் சுமோ விளங்குகிறது.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தங்கத்திற்கு ஈடாக மதிப்புடன் புதிய சுமோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சுமோ கோல்டு என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய சுமோ வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.

இந்த நிலையில், மாதத்திற்கு 5,000 சுமோ கார்களை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் யுட்டிலிட்டி வாகனப் பிரிவு தலைவர் ஆசிஷ் தர் கூறுகையில், "புதிய சிஆர்-4 எஞ்சினுடன் சுமோ கோல்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த புதிய சுமோ அதிக மைலேஜ் மற்றும் சுமூத்தான பெர்ஃபார்மென்ஸை வழங்கும். லிட்டருக்கு 14.3 கிமீ மைலேஜை வழங்கும் அதேவேளயில் 85 பிஎச்பி ஆற்றலையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்த தவறாது.

மேலும், முந்தைய மாடலைவிட ரூ.40,000 குறைவான விலையில் புதிய சுமோ கோல்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் மாதத்திற்கு வெறும் 1,100 சுமோ கார்களை விற்பனை செய்து வந்தோம்.

ஆனால், கடந்த 2 மாதங்களாக மாதத்திற்கு 3,000 சுமோ கார்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மாதத்திற்கு 5,000 சுமோ கோல்டு கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சென்னையில் பாரத் ஸ்டேஜ்-4 வெர்ஷன் சுமோ கோல்டு கார் ரூ.5.62 லட்சம் முதல் ரூ.7.03 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2012, 11:25 [IST]
English summary
Country's leading utility maker Tata motors planning to sell 5,000 units of recently launched new sumo gold, says company's higher official. The new sumo gold comes up with new CR4 engine and give more mileage than previous version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+