பாதுகாப்பு துறை எக்ஸ்போவில் கவச வாகனங்களை வரிசைகட்டிய டாடா

Tata Def Vehicle
டெல்லியில் நடந்து வரும் பாதுகாப்பு துறை கவச வாகனங்களுக்கான ஆட்டோ எக்ஸ்போவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல புதிய மாடல் கவச வாகனங்களை டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்து அசத்தியுள்ளது.

டெல்லி, பிரகதி மைதானத்தில் பாதுகாப்பு துறைக்கான கவச வாகனங்களின் ஆட்டோ எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன.

இதில், டாடா மோட்டார்ஸ் வைத்துள்ள எம்பிபிவி என்ற புல்லட் ப்ரூம் வசதி கொண்ட கவச வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களி்ன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய கவசம் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஏவுகணை பொருத்தப்பட்ட டாடா பரிகார் மிசைல் கேரியர் வாகனமும் பார்வைக்குக்கு வைக்கப்பட்டுள்ளது. இலகு ரக கவச வாகனம், மொபைல் பங்கர் உள்ளிட்ட ஏராளமான புதிய மாடல் கவச வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போவில் வரிசை கட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

இதுதவிர, எதிர்காலத்துக்கு தேவையான தொழி்ல்நுட்பத்துடன் கூடிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் இதர பாதுகாப்பு கருவிகளையும் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 30, 2012, 16:07 [IST]
English summary
Tata Motors today showcased a new Micro Bullet-Proof Vehicle (MBPV) at DEFEXPO India 2012, a highly mobile combat vehicle for indoor combat inside airports, railway stations and other such infrastructure. The concept is the first of its kind design to assist the country's elite forces in indoor combat.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+