டீசல் நானோவை விரைவில் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்?

டீசல் நானோ காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருவதாக செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கிறது. இந்த காருக்கான டீசல் எஞ்சினை போஸ்ச் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவி்ல் டீசல் நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஎன்ஜி மாடலை காட்சிக்கு வைத்து ஏமாற்றியது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மத்தியில் டீசல் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டீசல் நானோ காரின் இறுதிகட்ட சோதனை ஓட்டங்களை டாடா மோட்டார்ஸ் தீவிரமாக நடத்தி வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்று செய்திகள் வெளியாகி வருவதால் டீசல் நானோ மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டீசல் நானோ காரை ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என்று யூகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், இந்த தகவல்களை டாடா மோட்டார்ஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதனால், டீசல் நானோ கார் செய்திகளில் குழப்பம் நீடிக்கிறது. மற்றொரு தகவல் இந்த ஆண்டு இறுதிக்குள் டீசல் நானோ கார் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








