மஹிந்திரா கிரேட் எஸ்கேப்.. டிரைவ்ஸ்பார்க்கின் 'த்ரில்' அனுபவம்!

Thar Scout's Sakleshpur Mahindra Great Escape
'கிரேட் எஸ்கேப்' என்ற பெயரில் ஆஃப் ரோடு சாகச பயண போட்டிகளை மஹிந்திரா நடத்தி வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம், சக்லேஷ்பூரில் மஹிந்திராவின் கிரேட் எஸ்கேப் ஆஃப் ரோடு சாகச பயண போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், மஹிந்திரா அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கேற்றது.

பெங்களூரிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சக்லேஷ்பூர் கிழக்கு ஸ்காட்லாந்து என்று வர்ணிக்கப்படுகிறது. அத்தகைய பெருமைபெற்ற சக்லேஷ்பூரில்தான் இந்த ஆஃப் ரோடு சாகச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 80 ஜீப்புகள் இதில் பங்கேற்றன. போட்டியாளராக பங்கேற்றவர்கள் 5,000 ரூபாயும், ஆஃப் ரோடு பயண ஆசையில் ஆர்வலராக கலந்து கொண்டவர்கள் ரூ.3,000 கட்டணமும் செலுத்த வேண்டும். இதுதவிர, போட்டியாளர்களின் ஜீப்புகளில் 2 பேரும், ஆர்வலராக பங்கேற்றவர்களின் ஜீப்புகளில் 4 பேரும் செல்லலாம் என்பது நிபந்தனை. உணவு உள்பட அனைத்தையும் மஹிந்திராவே ஏற்பாடு செய்திருந்தது.

மொத்தம் 80 ஜீப்புகள் கலந்து கொண்டன. இதில், 20 ஜீப்புகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றன. மீதமுள்ளவை ஆஃப்ரோடு சாகசப் பயண ஆசையில் கலந்துகொண்ட ஆர்வலர்கள். நம் தளத்தின் சார்பில் எடிட்டர் ஜோபோ குருவில்லா கலந்து கொண்டார். அவரது பயண அனுபவம் இதோ,

மஹிந்திராவின் தார் ஜீப் கையில் கொடுக்கப்பட்டது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கான சிறந்த வடிவமைப்பு மற்றும் எஞ்சின் கொண்டது தார் ஜீப் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த போட்டிக்கான பந்தய பாதை மொத்தம் 23 கிமீ தொலைவு கொண்டது. 23 கிமீ தொலைவுதானே என்று நினைக்க வேண்டாம். கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை என்பது போன்ற கரடு முரடான மலைப்பாதைகள், நடுவில் சேறு சகதி நிறைந்த சாலைகள், ஆறுகள் வழியாக பந்தயப் பாதை சென்றது. சில இடங்களில் தார் ஜீப்பின் பாதியுளவு தண்ணீரிலும், சேற்றிலும் மூழ்கியது. இருந்தாலும், தாரின் எஞ்சின் முக்கி முணகி அழகாக நம்மை கரை சேர்த்தது.

ஒரு வழியை தவற விட்டால் கூட திரும்பவும் சரியான பாதையை பிடிப்பது அந்த அடர்ந்த காட்டுப் பாதையில் கடினம். வழியில் காபி தோட்டங்களும் நம் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தன. கரடு முரடான அந்த சவாலான சாலைகள் அனைத்தையும் புதிதாக போடப்பட்ட தார் ரோடாக நினைத்து தார் ஜீப் நீந்தி வந்தது. வழியில் ஆங்காங்கே பல இடையூறூகள், தடைகள் இருந்தாலும் மெதுவாக குறிப்பிட்ட இலக்கை எட்டினோம். அதே திருப்தியுடன் பெங்களூர் திரும்பினோம்..!!

More from DriveSpark

Article Published On: Monday, September 10, 2012, 13:14 [IST]
English summary
Sakleshpur has been slated, as one of the hard-bitten off-roading events in the Great Escape calendar. Drivespark was part of the fifth round of the off-roading Trophy 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+