இந்தியன் கிரான்ட் ப்ரீ பார்முலா-1 கார் பந்தய அட்டவணை

அக்டோபர் மாதம் துவங்கியவுடன் ஃபார்முலா-1 ஜுரம் ரேஸ் ரசிகர்களை பற்றிக் கொண்டு விடுகிறது. வரும் 26ந் தேதி முதல் 28ந் தேதி வரை இரண்டாவது பார்முலா-1 போட்டிகள் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளன.
போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கவனவே துவங்கப்பட்டுள்ளது. ரூ.2,000 முதல் ரூ.21,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம். இந்த நிலையில், போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த போட்டிகள் ஒவ்வொன்றும் 60 சுற்றுகளை(லேப்) கொண்டது. 5.137 கிமீ நீளம் கொண்ட ரேஸ் டிராக் ஒரு சுற்றாக கணக்கிடப்படும் வகையில் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகள் விபரம்:
26/10/2012(வெள்ளிக்கிழமை)
பிராக்டீஸ் செஷன் 1: காலை 10.00 மணிமுதல் 11.30 மணிவரை
பிராக்டீஸ் செஷன் 2: பிற்பகல் 2 மணிமுதல் 3.30 மணிவரை
27/10/2012(சனிக்கிழமை)
பிராக்டீஸ் செஷன் 3: முற்பகல் 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை
தகுதி சுற்று: 2 மணியளவில் துவங்கும்
28/10/2012(ஞாயிற்றுக்கிழமை)
இறுதிச் சுற்று: பிற்பகல் 3 மணியளவில் துவங்கும்


Click it and Unblock the Notifications








