கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: மதுரையில் இன்று முதல் அமல்

Ford Figo
மதுரையில் கார்களில் கருப்பு கண்ணாடி பொருத்துவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. கருப்பு கண்ணாடியுடன் காரில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக விரோதிகள் தப்பிக்க முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படும் கார்களின் கண்ணாடியில் கருப்பு பேப்பர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்பக்க கண்ணாடியில் (விண்ட் ஷீல்டு) 30 சதவீதம் அடர்த்தி கொண்ட கருப்பு பேப்பரும், பக்கவாட்டு மற்றும் பின்புற கண்ணாடியில் 50 சதவீதம் வரை அடர்த்தி கொண்ட கருப்பு பேப்பரும் ஒட்டியிருக்கலாம். இது கார் வாங்கும்போது விதிகளுக்கு உட்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். இதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் சென்னையில் அமலுக்கு வந்த இந்த தடை உத்தரவு இன்று முதல் மதுரையிலும் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் கருப்பு கண்ணாடியுடன் காரில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த உத்தரவுக்கு பிறருக்கு முன் உதாரணமாக இருக்கும் வகையில், மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் தன் காரில் ஒட்டப்பட்டிருந்த 100 சதவீத அடர்த்தி கொண்ட கருப்பு பேப்பரை நீக்கினார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2012, 12:06 [IST]
English summary
Madurai traffic police today starts fining those who have black films on their cars. "We have given people enough time to remove tinted film from their vehicles. From today we will fine violators," said a police officer from Madurai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+