டாப்-5 "பெர்ஃபார்மென்ஸ்" ஹேட்ச்பேக் கார்கள்: சிறப்பு பார்வை

டாப்-5 "பெர்ஃபார்மென்ஸ்" ஹேட்ச்பேக் கார்கள்: சிறப்பு பார்வை

நம் நாட்டு கார் மார்க்கெட்டின் வர்த்தகம் ஹேட்ச்பேக் கார்களை அடிப்படையாக கொண்டது. தற்போது 40 க்கும் மேற்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் இருக்கின்றன.சில கார்கள் பெட்ரோல் மற்றும் டீசலிலும் கிடைக்கின்றன. என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரோ அல்லது பிரிமியம் ஹேட்ச்பேக் காரோ, நீங்கள் எது வாங்க வேண்டும் என்றாலும் இந்த பட்டியலில் இருந்து சிறந்த கார்களை தேர்ந்தெடுப்பது கடினமானதாகவே இருக்கும்.

இந்த நிலையில், உங்களது கார் தேர்வு செய்யும் சிரமத்தை குறைக்கும் வகையில் மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த டாப் 5 பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் கார்களின் பற்றிய விபரங்களை வழங்குகிறோம். ஒரு டன் எடையில் அவை வெளிப்படுத்தும் திறனை அடிப்படையாக வைத்து கார்களை வரிசைப்படுத்தியுள்ளோம். ஸ்லைடரில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட டாப் 5 பெட்ரோல் ஹேட்ச்பேக் கார்களையும், தொடர்ந்து டாப் 5 டீசல் ஹேட்ச்பேக் காரின் தகவல்களை காணலாம்.

ஹூண்டாய் ஐ20 (ஆட்டோமேட்டிக்):

ஹூண்டாய் ஐ20 (ஆட்டோமேட்டிக்):

ஹேட்ச்பேக் கார்களிலேயே ஹூண்டாய் ஐ20 கார்தான் எடையுடன் வைத்து கணக்கிடும்போது பவரை வெளிப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது. ஐ20 காரின் 1110 கிலோ கெர்ப் எடையை சமாளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மொத்தத்தில் ஒரு டன் எடைக்கு 90.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை ஐ20 பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது. 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஐ20 காரின் விலை ரூ.8.92 லட்சம் விலை கொண்டது என்பதுதான் வாடிக்கையாளர்களின் முகத்தை சுளிக்க வைக்கிறது.

ஆல்ட்டோ கே10 (விஎக்ஸ்ஐ):

ஆல்ட்டோ கே10 (விஎக்ஸ்ஐ):

குட்டிக் காரான ஆல்ட்டோ கே10 சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கார் என்பது அனைவரும் அறிந்ததுதான். இலகு எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆல்ட்டோ கே10 765 கிலோ கெர்ப் எடை கொண்டது. 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த காரின் எஞ்சின் அதிகபட்சம் 67 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். எடையை வைத்து பார்க்கும்போது இதன் எஞ்சின் ஒரு டன் எடைக்கு 87.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ற வகையில் ஆல்ட்டோ கே10 கார் இந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடிக்கிறது.தவிர, இது பிற மாடல்களைவிட சவாலான ரூ.3.09 லட்சம் விலையில் கிடைக்கிறது.

டொயோட்டா லிவா(விஎக்ஸ்):

டொயோட்டா லிவா(விஎக்ஸ்):

மூன்றாவது இடத்தை டொயோட்டா லிவா கார் பெறுகிறது. இந்த காரில் 79 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்க முரட்டு காராக இருந்தாலும் வெறும் 920 கிலோ மட்டுமே கெர்ப் எடை கொண்டது. எடை அடிப்படையில் எஞ்சின் ஆற்றலை கணக்கிடும்போது ஒரு டன்னுக்கு 85.9 பிஎச்பி ஆற்றலை இதன் எஞ்சின் வெளிப்படுத்தும்.

ஸ்விப்ட் (விஎக்ஸ்ஐ):

ஸ்விப்ட் (விஎக்ஸ்ஐ):

நாட்டின் வெகு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விப்ட்டில் 1.2 லிட்டர் எஞ்சி்ன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 86 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 1010 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த காரின் எஞ்சின் ஒரு டன்னுக்கு 85.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருப்பதால் டாப் 5 லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறது. ரூ.5.76 லட்சத்தில் கிடைக்கிறது.

ஹோண்டா ஜாஸ்(எக்ஸ்):

ஹோண்டா ஜாஸ்(எக்ஸ்):

குட்டி எம்பிவி கார் போல் இருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் ஹோண்டா ஜாஸ் காரில் ஆற்றல் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 89 பவரை வெளிப்படுத்தும். ஸ்விப்ட்டை விட சற்று கூடுதலாக 1060 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த காரின் எஞ்சின் ஒரு டன்னுக்கு 84 பிஎச்பி என்ற அளவில் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20(அஸ்ட்டா):

ஹூண்டாய் ஐ20(அஸ்ட்டா):

பெர்ஃபார்மென்ஸ் டீசல் கார்களின் டாப் 5 பட்டியலிலும் ஹூண்டாய் ஐ20தான் முதலிடம் பெறுகிறது. 1065 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த காரில் 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 94 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஒரு டன்னுக்கு இந்த எஞ்சின் 84.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த கார் ரூ.7.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபியட் கிராண்ட் புன்ட்டோ 90எச்பி:

ஃபியட் கிராண்ட் புன்ட்டோ 90எச்பி:

ஐ20 காருக்கு அடுத்ததாக ஃபியட் புன்ட்டோ டீசல் இடம் பிடிக்கிறது. ஹெவி பாடியால் 1130 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 92 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஒரு டன் எடையை மையமாக வைத்து கணக்கிடும்போது இந்த காரின் எஞ்சின் 81.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த கார் ரூ.8.72 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி ஸ்விப்ட்(இசட்டிஐ):

மாருதி ஸ்விப்ட்(இசட்டிஐ):

அனைவராலும் போற்றப்படும் ஸ்விட்டு டீசலுக்கு இந்த விஷயத்தில் மூன்றாமிடம். 1080 கிலோ கெர்ப் எடை கொண்ட ஸ்விப்ட்டில் 74 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் திறனை ஒரு டன்னுக்கு வைத்து கணக்கிடும்போது 68.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஸ்விப்ட் இசட்டிஐ வேரியண்ட் ரூ.7.97 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா விஸ்டா குவாட்ராஜெட் விஎக்ஸ்:

டாடா விஸ்டா குவாட்ராஜெட் விஎக்ஸ்:

ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் அதே டீசல் எஞ்சின்தான் விஸ்டாவுக்கும் உயிர் கொடுக்கிறது.ஸ்விப்ட் மற்றும் விஸ்டாவின் கெர்ப் எடை ஒன்றாக இருப்பதால் பவர் வெளிப்படுத்தும் திறனில் மூன்றாம் இடத்தை ஸ்விப்ட்டோடு பகிர்ந்து கொள்கிறது. ஸ்விப்ட்டை விட விஸ்டாவின் விலை குறைவு. விஸ்டாவின் டாப் வேரியண்ட் டீசல் மாடல் ரூ.6.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

டொயோட்டா லிவா(ஜிடி):

டொயோட்டா லிவா(ஜிடி):

ஒரு டன்னுக்கு கொஞ்சம் குறைவான எடை கொண்ட டொயோட்டா லிவாவின் டீசல் எஞ்சின் ஒரு டன் எடையை கொண்டு கணக்கிடுகையில் 68.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. எனவே, ஸ்விப்ட், விஸ்டாவுக்கு அடுத்த இடத்தை லிவா டீசல் பிடிக்கிறது. ரூ.5.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 3, 2012, 16:07 [IST]
English summary
Following ten hatchbacks both petrol and diesel, which we feel are among the best based on the performance. They are fitted with performance packed engines, which generate healthy mileage and are loaded with some remarkable features also.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+