புதிய 1.5 லிட்டர் எஞ்சினுடன் பட்டய கிளப்ப வரும் டொயோட்டா லிவா

டொயோட்டாவின் விற்பனையில் லிவா கார் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இருப்பினும், லிவாவின் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி காண வில்லை. இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், லிவாவுக்கு அதிக திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினை பொருத்த டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
லிவா தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எட்டியோஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை லிவாவில் பொருத்த டொயோட்டோ முடிவு செய்துள்ளது.
இந்த எஞ்சின் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். லிவாவின் நேரடி போட்டியாளரான மாருதி ஸ்விப்ட், வடிவமைப்பு மற்றும் பெர்ஃபார்மென்சில் அசத்தலாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவனம் பிற மாடல்களின் மீது அவ்வளவாக திரும்ப வில்லை.
இந்த நிலையில், பவரை விரும்பும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திருப்பும் வகையில், லிவாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்த டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன. ஆனால், அதிக திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் நிச்சயம் மைலேஜில் பின்தங்கும்.
பெட்ரோல் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், லிவாவில் அதிக திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தினால் அது எந்தளவு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








