கார் விலையை 4 சதவீதம் வரை உயர்த்திய டொயோட்டோ

பட்ஜெட்டில் கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கார்களின் விலை கணிசமாக உயருகிறது. அனைத்து கார் நிறுவனங்களின் புதிய விலை உயர்வு குறித்து ஆய்வு செய்து வருகின்றன.
இந்த நிலையில், டொயோட்டோ நிறுவனம் முதலில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது அனைத்து கார்களின் விலையையும் ரூ.10,000 முதல் ரூ.80,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டோ.
ஹேட்ச்பேக் காரான லிவாவின் பெட்ரோல் மாடல் விலை .9,500 ரூபாயும் டீசல் மாடல் விலை 11,500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. எட்டியோஸ் செடான் காரின் பெட்ரோல் மாடல் விலை 11,500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கரொல்லா ஆல்டிஸ் பெட்ரோல் மாடல் விலை 39,000 ரூபாயும், டீசல் மாடல் விலை 26,500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னோவா காரின் விலை ரூ.32,500 அதிகரிக்கிறது. அதிகம் விற்பனையாகும் பார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி காரின் விலை ரூ.80,000 உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி வரியும் கணிசமாக அதிகரிக்கப்பட்டிருப்பதால், டொயோட்டோவின் லேண்ட் க்ரூஸர், கேம்ரி, பிராடோ ஆகிய கார்களின் விலையும் உயருகிறது. ஆனால், இந்த கார்களின் விலை உயர்வு விபரத்தை விரைவில் அறிவிக்கப்படும் என்று டொயோட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








