இந்தியாவிலிருந்து லிவா கார் ஏற்றுமதியை துவங்கிய டொயோட்டோ

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டோ இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா மார்க்கெட்டுக்கு தக்கவாறு எட்டியோஸ் செடான் மற்றும் லிவா கார்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் லிவா, எட்டியோஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டொயோட்டோ கிர்லோஸ்கர் முடிவு செய்தது. இதன்படி, முதன்முறையாக தென் ஆப்ரிக்க மார்க்கெட்டுக்கு லிவா மற்றும் எட்டியோஸ் கார்களின் ஏற்றுமதியை டொயோட்டோ துவங்கியுள்ளது.
முதல் லாட்டில் 247 கார்களை தென் ஆப்ரிக்காவுக்கு டொயோட்டோ ஏற்றுமதி செய்தது. சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் லிவா, எட்டியோஸ் கார்களை ஏற்றுமதி செய்வதற்காக விழா ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.
இதில், டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், டொயோட்டோ கிர்லோஸ்கர் தலைவர் ஹிரோஷி நாகவா உள்ளிட்ட முதன்மை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications








