ஸ்போர்ட்ஸ் காரை தயாரிக்க கைகோர்த்த பிஎம்டபிள்யூ-டொயோட்டா

டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பமும், பிஎம்டபிள்யூவின் இலகு எடை கட்டுமான தொழில்நுட்பத்தின் கலவையில் புதிய கார்கள் தயாரிக்கப்பட உள்ளது.
டொயோட்டாவின் செலிக்கா பிராண்டில் உருவாக்கப்படும் இந்த புதிய கார் பிஎம்டபிள்யூவின் 3 சீரிஸ் பிளாட்பார்மில் இலகு எடை மற்றும் கட்டிங் எட்ஜ் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும்.
இதேபோன்று, பிஎம்டபிள்யூ நிறுவனமும் டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடுத்தர எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை வடிவமைக்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களை வடிவமைப்பதற்கும், இலகு எடை கட்டுமான கார்களை உருவாக்குவதற்கும் ஆகும் செலவீனத்தை இரு நிறுவனங்களும் கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








