டொயோட்டா கார்களுக்கு டிமான்ட்... வெயிட்டிங் பீரியட் அதிகரிப்பு

இன்னோவா
மார்க்கெட்டில் டொயோட்டா கார்களுக்கு அதிக டிமான்ட் நிலவுகிறது. எனவே, உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை டொயோட்டா முழு மூச்சாக இறங்கியுள்ளது.

டொயோட்டாவின் அதிக டிமான்ட் உள்ள கார் வரிசையில் இன்னோவாதான் முதலிடம் வகிக்கிறது. இன்னோவாவுக்கு 15 நாட்களில் டெலிவிரி சூழல் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தேவையால் இன்னோவாவின் காத்திருப்பு காலம் ஒரு மாதத்தை தாண்டுகிறது.

இதற்கடுத்து, பார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவிக்கும் அதிக தேவை எழுந்துள்ளது. எட்டியோஸ், கரொல்லா உள்ளிட்ட கார்களுக்கும் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. பெங்களூர் அருகிலுள்ள பிடதியில் உள்ள இரு ஆலைகளிலும் ஆண்டுக்கு 2.10 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். முதல் ஆலையில் இன்னோவாவும், இரண்டாவது ஆலையில் பார்ச்சூனர்,எட்டியோஸ், கரொல்லா ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

லேண்ட் க்ரூஸர், பிரடா, பிரையஸ் உள்ளிட்ட கார்கள் நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால் உற்பத்தி நெருக்கடியில் அவை சிக்கவில்லை. இன்னோவா உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாடல்களுக்குத்தான் எகிடுதகிடாக தேவை அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில்கொண்டு தனது இரண்டு ஆலைகளின் மொத்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு 3.10 லட்சம் கார்களாக அதிகரிக்க டொயோட்டா முடிவு செய்திருக்கிறது. வரும் காலங்களில் டொயோட்டா கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 30, 2012, 13:14 [IST]
English summary
Toyota cars are receiving huge demands in India. The company is looking to cater to these demands immediately. Currently the production plant, rolls out 2,10,000 units. Toyota is looking to bump up these units to 3,10,000 annually.
மேலும்... #toyota #டொயோட்டா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+