சொகுசு கார்கள் அறிமுகத்தை தள்ளிப்போட டொயோட்டா முடிவு

அடுத்த ஆண்டு தனது லெக்சஸ் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டொயோட்டா கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதேபோன்று மற்றொரு ஜப்பானிய நிறுவனமான நிசானும் தனது இன்பினி்ட்டி சொகுசு கார்களை வரும் 2014ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், சொகுசு கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகிய கார் நிறுவனங்கள் ரூ.25 லட்சத்தில் புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. இதனால், டொயோட்டாவும், நிசானும் தங்களது சொகுசு கார் அறிமுக திட்டங்களை தள்ளிப் போட்டுள்ளன.
ஏனெனி்ல், இதுபோன்று சவாலான விலையில் ஜெர்மன் நிறுவனங்கள் சொகுசு கார்களை விற்பனைக்கு கொண்டு வரும்போது தங்களது பிராண்டு அந்த போட்டியை சமாளிக்குமா என்ற தயக்கம் அந்த நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதேபோன்று, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி ஆகியவையும் அந்த நிறுவனங்களை யோசிக்க வைத்திருக்கி்ன்றன.
எனவே, டொயோட்டா லெக்சஸ் மற்றும் நிசான் இன்பினிட்டி சொகுசு கார்களின் அறிமுகம் தள்ளிப் போகும் என ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








