புதிய எஞ்சின் ஆலையில் அடுத்த மாதம் உற்பத்தி துவங்கும்: டொயோட்டா

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா பெங்களூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. லிவா மற்றும் எட்டியோஸ் கார் மாடல்களுக்கு இதுவரை வெளிநாட்டில் உள்ள தனது ஆலைகளிலிருந்து எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ்களை பெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த இரு கார்களுக்கும் உள்நாட்டில் வரவேற்பு நல்ல வரவேற்பதோடு, ஏற்றுமதியும் துவங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு கார்களுக்குமான தேவையை கருதி, பெங்களூரில் எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பதற்காக புதிய ஆலையை கட்டியிருக்கிறது டொயோட்டா.
500 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஆலையில் அடுத்த மாதம் முதல் உற்பத்தி துவங்கும் என டொயோட்டா துணை மேலாண் இயக்குனர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
"லிவா மற்றும் எட்டியோஸ் கார் மாடல்கள் உள்நாட்டில் மட்டுமின்றி ஏற்றுமதியும் துவங்கியுள்ளோம். எனவே, தேவை அதிகரிக்கும் என்பதால், அந்த மாடல்களுக்கான பாகங்களை உள்நாட்டிலேயே முடிவு செய்தோம்.
இதற்காக, பெங்களூரில் புதிய எஞ்சின் பிரிவை அமைத்துள்ளோம். இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் எஞ்சின்களையும், 2.40 லட்சம் ட்ரான்ஸ்மிஷன்களையும் உற்பத்தி செய்ய முடியும்.
சென்னை துறைமுகம் வழியாக லிவா, எட்டியோஸ் கார்களின் ஏற்றுமதியை துவங்கியுள்ளோம். மேலும், சென்னை துறைமுகம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதால், சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








