டாக்ஸி அவதாரம் எடுத்த டொயோட்டோ எட்டியோஸ்

Toyota Etios
டொயோட்டோ எட்டியோஸ் செடான் கார் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது. ஆம், மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் டாக்ஸி பெர்மிட்டுடன் எட்டியோஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ தயாரிப்புகளுக்கு இந்திய மார்க்கெட்டில் தனி மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் பின்னி எடுத்து வரும் எட்டியோஸ் காரை டாக்ஸி பெர்மிட்டுடன் டொயோட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மும்பை, டெல்லி, ஆமதாபாத் மற்றும் பெங்களூரில் எட்டியோஸ் செடான் டாக்ஸி பெர்மிட்டுடன் வந்துள்ளது. இதுவரை 600 எட்டியோஸ் கார்கள் டாக்ஸி பெர்மிட்டுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வாடகை கார் நிறுவனங்களிடையே டாக்ஸி பர்மிட் எட்டியோசுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் டொயோட்டோ தெரிவித்துள்ளது.

தற்போது இந்த செக்மென்ட்டில் மஹிந்திராவின் வெரிட்டோ(முன்னாள் லோகன்)கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், எட்டியோஸ் டாக்ஸி அவதாரம் எடுத்துள்ளது மஹிந்திரா வெரிட்டோவுக்கு கடும் மார்க்கெட் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2012, 11:03 [IST]
English summary
Japanese car maker Toyota has introduced Etios with taxi permit. The new etios taxi avatar most welcomed by customers. The new taxi will give tough competition to Mahindra Verito.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+