கார் விலையை மீண்டும் உயர்த்திய டொயோட்டா

பண்டிகை காலம் துவங்கும் நிலையில் வழக்கமாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வது கார் நிறுவனங்களின் வழக்கம். ஆனால், இந்த முறை விலை உயர்வை கையிலெடு்தது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது டொயோட்டா.
கடந்த ஜூனில்தான் கார்களின் விலையை உயர்த்தியது டொயோட்டா. இந்தநிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதை சமாளிக்க அனைத்து கார் மாடல்களின் விலையையும் 1.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வரும் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் அதிருப்தியை தரும் செய்தியாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








