டொயோட்டோ இன்னோவா vs மஹிந்திரா ஸைலோ vs டாடா ஆரியா: ஒப்பீடு

நம் நாட்டில் சிறிய கார்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், சத்தமில்லாமல் எம்பிவி கார் மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. அதிக இடவசதி, திறன் வாய்ந்த எஞ்சின், பாதுகாப்பு ஆகியவை எம்பிவி கார்கள் மீது வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.

தற்போது மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ மற்றும் டாடா ஆரியா கார்களின் முக்கிய அம்சங்களின் காணலாம்.

Car Comparison

டொயோட்டோ இன்னோவா:

அதிக இடவசிதி கொண்ட கார் என்பதோடு அலுங்கல் குலுங்கல் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற கார். டொயோட்டோவின் தரத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இன்னோவா. நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் இன்னோவாவின் எண்ணிக்கை ஆதிக்கத்தை வைத்தே அந்த கார் மீதான வரவேற்பை தெரிந்துகொள்ளலாம்.

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் இன்னோவா கிடைக்கிறது. நகரச் சாலைகளில் லிட்டருக்கு 9.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 12.0 கிமீ மைலேஜையும் கொடுக்கும்.

55 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களுடன் இன்னோவா கிடைக்கிறது. 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களிலும் இன்னோவா கிடைக்கிறது. ரூ.10.37 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

மஹிந்திரா ஸைலோ:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தற்போது புதிய ஸைலோ விற்பனைக்கு வந்துள்ளது. ஸைலோவில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர, ஸைலோவின் இ-9 டாப் வேரியன்ட் ஸ்கார்ப்பியோவில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சினுடன் கிடைக்கிறது.

இதிலும், 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருப்பதால் நீண்ட பிரயாணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மஹிந்திரா ஸைலோ சராசரியாக லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜ் கொடுக்கும். மஹிந்திரா ஸைலோ ரூ.7.37 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா ஆரியா:

இந்தியாவின் முதல் கிராஸ்ஓவர் ரகத்தை சேர்ந்த எம்பிவிதான் டாடாவின் ஆரியா. ஏரியாவை கலக்குவதற்கான அனைத்து அம்சங்களும் ஆரியாவில் உண்டு. இன்னோவா, ஸைலோவைவிட ஆரியாவில் எரிபொருள் டேங்க் கொள்ளளவு அதிகம். ஆம், டாடா ஆரியாவில் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

பாரத்-4 வெர்ஷன் கொண்ட 2.2 லிட்டர் டிகோர் டீசல் எஞ்சினுடன் ஆரியா கிடைக்கிறது. ஆரியாவின் 2 வீல் டிரைவ் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜையும், ஆல் வீல் டிரைவ் லிட்டருக்கு 11.8 கிமீ மைலேஜையும் கொடு்ககும்.

இன்னோவா, ஸைலோவை ஒப்பிடும்போது ஆரியாவின் பேஸ் வேரியன்ட்டில் வசதிகளும், அம்சங்களும் ஏராளம். ஆனால், விலை ரொம்ப ஜாஸ்தி. ரூ.13.52 லட்சம் முதல் ரூ.18.71 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் ஆரியா விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் விற்பனையில் பின்தங்கியிருப்பதற்கு வேறு காரணத்தை கூற வேண்டியதில்லை.

டிரைவ் ஸ்பார்க் தீர்ப்பு:

கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் செல்ல வேண்டும் என்பவர்களுக்கு இன்னோவா பெஸ்ட். 5+2 எண்ணிக்கை கொண்ட எங்கள் குடும்பம் பயணம் செய்வதற்கு மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட நல்ல மைலேஜ் கொடுக்கும் எம்பிவி கார் வேண்டும் என்பவர்களுக்கு ஸைலோ பெஸ்ட். விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை, அனைத்து வசதிகளுடன் கூடிய கார் வேண்டும் என்பவர்கள் நேராக டாடா மோட்டார்ஸின் ஆரியா பக்கம் சென்றுவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 26, 2012, 11:56 [IST]
English summary
The Toyota Innova has been a strong player in the MPV segment and so are the Mahindra Xylo and the Tata Aria. Here is a detailed comparisons between these three big MPVs in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+