புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தும் டொயோட்டா

பிரிமியம் ரகத்தில் வர இருக்கும் இந்த புதிய கார் 1.5 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் ஆகிய இரண்டு வித ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின்களில் வர இருக்கிறது. இதில்,102 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 2 வீல் டிரைவ் கொண்ட மாடலில் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 142 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் 4 வீல் டிரைவ் மாடலில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருப்பதாக ஆன்லைன் வட்டாரத் தகவல்கள் பரபரக்கின்றன. மேலும், தனது கூட்டணி நிறுவனமாகியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் இருந்து இந்த காருக்கான இரு எஞ்சின்களையும் டொயோட்டா பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுதவிர, பிரையஸ் ஹைபிரிட் கார் பிளாட்பார்மில் புதிய சிறிய ஹைபிரிட் காரையும் அந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல்கள் டொயோட்டா விற்பனையில் நிச்சயம் புதிய இடத்தை பிடித்து தரும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








