சென்னையில் யூஸ்டு கார் ஷோரூம் திறந்தது டொயோட்டா

டொயோட்டா யு டிரஸ்ட் என்ற பிராண்டில் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் டொயோட்டா யு டிரஸ்ட் பிராண்டில் 19பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மையங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொண்டு வரும் அந்த நிறுவனம் சென்னை மற்றும் பரீதாபாத்தில் இரண்டு புதிய பயன்படுத்தப்பட்ட கார் ஷோரூம்களை திறந்துள்ளது. சென்னையில், நந்தனத்தில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு ஓர் ஆண்டு அல்லது 15,000கிமீ வாரண்டியுடன் மூன்று இலவச சர்வீஸ் சலுகையையும் வழங்குவதாகவும், டொயோட்டா பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு எஞ்சின் மற்றும் கியர் பாக்ஸ்களுக்கு கூடுதல் வாரண்டி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஷோரூமில் புதிய டொயோட்டா கார் வாங்க விரும்புவர்கள் காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த புதிய ஷோரூமில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அடுத்த ஆண்டுக்குள் தனது யூஸ்டு கார் ஷோரூம் எண்ணிக்கையை 35 ஆக உயர்த்தவும் டொயோட்டா முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








