புதிய காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் செடான் கார்: டொயோட்டா திட்டம்

காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி மார்க்கெட்டில் அடுத்தடுத்து புதிய மாடல்கள் வந்துகொண்டே இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி அதிகரித்துள்ளது. இந்த மார்க்கெட்டில் இடம்பெற அனைத்து நிறுவனங்களும் போட்டி போட முடிவு செய்துள்ளன. இதில், டொயோட்டாவும் களமிறக்க முடிவு செய்துள்ளது.
இன்னோவாவைவிட சிறிய எம்பிவி அல்லது காம்பெக்ட் எஸ்யூவி காரை விரைவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர் விரைவில் வர இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும். எஸ்யூவி அல்லாமல் எம்பிவியாக வரும் பட்சத்தில் அது மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா ஸைலோவுக்கு போட்டியை கொடுக்கும் மாடலாக இருக்கும்.
இதேபோன்று, என்ட்ரி லெவலில் இருக்கும் எட்டியோஸ் மற்றும் டி செக்மென்ட்டில் இருக்கும் கரொல்லா ஆல்டிஸ் செடான் கார்களுக்கு இடையிலான வெற்றிடத்தை நிரப்ப புதிய மிட்சைஸ் செடான் காரை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய செடான் கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஃபியஸ்ட்டா மற்றும் நிசான் சன்னி ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் வரும் என்று தெரிகிறது. இந்த புதிய கார்கள் மூலம் தனது மார்க்கெட்டை நிலைப்படுத்திக் கொள்ள டொயோட்டா கண்ககு போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








