எர்டிகாவை போட்டு தாக்க புதிய எம்பிவியை களமிறக்கும் டொயோட்டா

Avanza
மாருதி எர்டிகாவுக்கு நேர் போட்டியை கொடுக்கும் வகையில், புதிய காம்பெக்ட் எம்பிவி காரை களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

குறைந்த விலை, அதிக அம்சங்களுடன் வந்திருக்கும் மாருதி எர்டிகாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. புக்கிங் எண்ணிக்கையிலும் எர்டிகா அசத்தியிருக்கிறது.

இந்த நிலையில், எம்பிவி மார்க்கெட்டில் இன்னோவாவை வைத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் டொயோட்டா, மாருதி எர்டிகாவின் மார்க்கெட்டை ஆட்டிப் பார்க்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, தனது அவஞ்சா காம்பெக்ட் எம்பிவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. பார்ப்பதற்கு குட்டி இன்னோவா போன்று இருந்தாலும் வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்கும்.

தவிர, இன்னோவாவை விட குறைந்த விலையில் வருவதோடு. தாராள இருக்கை வசதி, நவீன தொழில்நுட்பங்கள் என அனைத்திலும் சிறப்பாக வருவதால் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

தவிர, சமீபத்தில் சந்தைக்கு வந்திருக்கும் மஹிந்திரா குவான்ட்டோ, பிரிமியர் ரியோ ஆகிய மார்க்கெட்டையும் கொஞ்சம் அசைக்கும் ஆற்றலும், அம்சங்களும் அவஞ்சாவில் இருக்கும்.

மேலும், இந்திய மார்க்கெட்டில் யுட்டிலிட்டி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதையும் கணக்கில் கொண்டு இந்த புதிய காம்பெக்ட் எம்பிவியை டொயோட்டா களமிறக்க உள்ளது. இந்த புதிய கார் நிச்சயம் டொயோட்டாவின் மார்க்கெட் பங்களிப்பை உயர்த்தும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 22, 2012, 15:50 [IST]
English summary
Japanese car maker Toyota Motors is planning to launch new Multi Purpose Vehicle in the Indian market in competition with the Maruti Ertiga.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+