ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் புதிய டொயோட்டோ கரொல்லா ஆல்டிஸ்

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களுக்கு வரவேற்பு சிறிது சிறிதாக கூடி வருகிறது. இதனால், பல நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்வதிலும் கவனத்தை திருப்பியுள்ளன.
அந்த வகையில், தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கரோல்லா ஆல்டிஸ் காரை டொயோட்டோ அறிமுகம் செய்துள்ளது. புதிய கரொல்லா 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது.
இதில், வேடிக்கையான விஷயம் கரொல்லா ஆல்டிஸ் டாப் வேரியண்ட்டை விட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் ரூ.1.24 லட்சம் குறைவான விலையில் வந்துள்ளது. இருப்பினும், டச் ஸ்கிரீன் டிவிடி ப்ளேயர், புளூடூத் உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் இதில் இருக்கிறது.
பில்டு குவாலிட்டி, குறைந்த பராமரிப்பு, சொகுசு வசதிகள் என அனைத்திலும் கரொல்லா ஆல்டிஸ் சிறந்த காராக திகழ்கிறது. புதிய கரொல்லோ ஹோண்டா சிவிக், ஸ்கோடா லாரா மற்றும் செவர்லே குரூஸ் ஆகிய பிரிமியம் ரக கார்களுக்கு பெரும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








