வரும் 24ந் தேதி புதிய கேம்ரியை அறிமுகப்படுத்தும் டொயோட்டா

Toyota Camry
வரும் 24ந் தேதி ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் புதிய கேம்ரி சொகுசு செடான் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது டொயோட்டா.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கேம்ரி காரை பார்வைக்கு வைத்திருந்தது டொயோட்டா. அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது புதிய கேம்ரி.

இந்தநிலையில், ஐரோப்பிய சொகுசு கார்களுக்கு போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் புதிய கேம்ரியை களமிறக்குகிறது. இதற்கு முன் விற்பனை செய்யப்பட்டு வந்த கேம்ரி காரை டொயோட்டா இறக்குமதி செய்து விற்பனை செய்தது.

ஆனால், புதிய கேம்ரி காரை பாகங்களாக இறக்குமதி செய்து பெங்களூரில் அருகேயுள்ள பிடதியில் உள்ள ஆலையில் அசெம்பிளிங் செய்ய உள்ளது. இதனால், சவாலான விலையில் புதிய கேம்ரி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 3.5 லிட்டர் வி6 எஞ்சினுக்கு இணையான ஆற்றலை கொண்டிருக்கும். ஹோண்டா அக்கார்டு, ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய கார்களுக்கு புதிய கேம்ரி நேரடி போட்டியை கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 6, 2012, 12:33 [IST]
English summary
The new Toyota Camry premium sedan is set to be launched this August. The new Camry's launch will be followed by the launch of special edition models of the Innova and the Fortuner in this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+