சொந்த பைனான்ஸ் மூலம் கார் கடன் சேவை: டொயோட்டோ துவங்குகிறது

Toyota Liva
வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கார் கடன் கிடைக்கும் வகையில், சொந்த பைனான்ஸ் நிறுவனத்தை டொயோட்டோ துவங்குகிறது. டெல்லியில் முதலில் துவங்கப்படும் இந்த சேவை படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று டொயோட்டோ தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கார் கடன் கிடைக்கும் வகையில், பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகிய சொகுசு கார் நிறுவனங்கள் சொந்த பைனான்ஸ் மூலம் கார் கடன் சேவையை வழங்கி வருகின்றன. மஹிந்திரா கூட சொந்த பைனான்ஸ் மூலம் கடன் வசதியை செய்து தருகிறது.

இதனை பின்பற்றி கார் உற்பத்தியில் ஜாம்பவானான டெயோட்டோ சொந்த பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 5ந் தேதி முதல் டெல்லியில் கார் கடன் வழங்கும் சேவையை துவங்க உள்ளதாக டொயோட்டோ பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, ரூ.260 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

ஏற்கனவே உலகெங்கிலும் 33 நாடுகளில் கார் கடன் சேவையை டொயோட்டோ வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவிலும் தனது சொந்த பைனான்ஸ் மூலம் கார் கடன் சேவையை வழங்க உள்ளது. 12 முதல் 12.5 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடன் வழங்கப்பட உள்ளதாக டொயோட்டோ பைனான்ஸ் கார்ப்பரேஷன் சிஇஓ கஸுகி ஒகுரா தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 31, 2012, 11:21 [IST]
English summary
Toyota has started own finance company for car loans. The company planning to invest Rs 260 crore for its expansion in the coming years. Initially Toyota Financial Services India (TFSI) will start its operations in Delhi.
மேலும்... #toyota #டொயோட்டோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+