கார்களுக்கு கோடைகால சிறப்பு சர்வீஸ் முகாம்:டொயோட்டோ அறிவிப்பு

விற்பனைக்கு பின்னரும் வாடிக்கையாளர்கள் சேவைக்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், டொயோட்டோ நிறுவனம் சிறப்பு சர்வீஸ் முகாமை நடத்துகிறது. இந்த சர்வீஸ் முகாமில் ஒருங்கிணைந்த கார் பரிசோதனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
தென் மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் கடந்த 16ந் தேதி முதல் இந்த முகாம் நடந்து வருகிறது. வடமாநிலங்களில் அடுத்த மாதம் 15ந் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 14ந் தேதி வரை இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது.
கோடை விடுமுறையை கழிக்க வெளியூர் செல்வதற்கும், கோடைகாலத்தில் கார்களில் பழுது ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இந்த முகாமில் 20 விதமான பரிசோதனைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆக்சஸெரீஸ்களின் விலையில் தள்ளூபடி சலுகைகளையும் வழங்குவதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு டொயோட்டோ கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








