சிறிய கார் விற்பனையில் தொய்வு, எஸ்யூவி விற்பனையில் நல்ல ஏற்றம்

எனவே, 2012ம் ஆண்டை எஸ்யூவியின் காலம் என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கார் விற்பனையில் சிறிய கார்களின் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அதேவேளை, எஸ்யூவி விற்பனை 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்களின் கவனம் தற்போது எஸ்யூவி மார்க்கெட் மீது திரும்பியுள்ளது.
என்ட்ரி லெவல் கார்கள் என்று கூறப்படும் டாடா நானோ, மாருதி ஆல்ட்டோ, செவர்லே ஸ்பார்க், மாருதி வேகன்-ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ,ஐ10, இயான் என மொத்தமாக என்ட்ரி லெவல் கார்களின் விற்பனையை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 47 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதனால், மொத்த கார் விற்பனை 0.07 சதவீதம் சரிவடைய காரணமாகியுள்ளது. அதே, பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஹூண்டாய் ஐ20, மாருதி ஸ்விப்ட், வோக்ஸ்வேகன் போலோ ஆகிய பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார்களின் மொத்த விற்பனை 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதைவிட பெரிய ஆச்சரியம் எஸ்யூவி செக்மென்ட்டில்தான். என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களின் விலையை ஒப்பிடும்போது, மூன்று மடங்கு அல்லது அதற்கு மேல் விலை கொண்ட எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த ஆண்டு அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு எஸ்யூவி விற்பனை யாருமே எதிர்பாராத வகையில் 32 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு எஸ்யூவி செக்மென்ட்டில் பெரும் போட்டா போட்டியே ஏற்படும் அளவுக்கு புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
சிறிய கார்கள் வைத்திருந்தவர்கள் அடுத்ததாக செடான் கார் பக்கம் கவனத்தை திருப்புவது வழக்கம். மாறாக தற்போது அவர்கள் கவனம் தற்போது எஸ்யூவி மாடல்கள் மீது விழுந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு, சான்றாக புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டொயோட்டோ பார்ச்சூனர் ஆகிய எஸ்யூவிக்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதை ஆட்டோமொபைல் துறையினர் குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த ஆண்டு எஸ்யூவி மாடல்களின் ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








