வரிப் பணத்தில் எம்எல்ஏக்களுக்கு கார்: உத்தரவை வாபஸ் பெற்ற அகிலேஷ்

தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 20 லட்ச ரூபாயை எடுத்து புதிய கார் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். 20 லட்சதுக்கு மிகாமல் கார் வாங்கிக் கொள்ள வேணடும் என்று ஒரு கன்டிஷனும் போட்டிருந்தார்.
இதற்காக, ஆண்டுக்கு 1.25 கோடியாக இருந்த தொகுதி மேம்பாட்டு நிதியை 1.50 கோடியாக அவர் உயர்த்தினார். தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பதற்கு ஏதுவாக புதிய கார் வாங்க அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், எம்எல்ஏக்கள் வாங்கும் கார்களை ஐந்தாண்டுகளில் பதவிக்காலம் முடியும்போது அரசிடம் திருப்பி வழங்கிட வேண்டும். இல்லையென்றால் அப்போதைய மார்க்கெட் விலையை போட்டு காருக்கான தொகையை அரசிடம் செலுத்தி எம்எல்ஏக்கள் அந்த காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 403 எம்எல்ஏக்கள் மற்றும் 100 எம்எல்சிக்கள் கார் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்தமாக 100 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்கள் வரிப்பணத்தில் கார் வாங்க அனுமதித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் தனது முடிவை மாற்றிக்கொண்டு உத்தரவை வாபஸ் பெற்றுள்ளார் அகிலேஷ். இதனால், இந்த பிரச்னைக்கு உடனடி முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அகிலேஷ்.


Click it and Unblock the Notifications








