இந்த மாதம் ரிலீசாகும் பைக் மற்றும் கார்கள் பற்றிய ஒரு பார்வை
பண்டிகை காலத்தையொட்டி அடுத்தடுத்து புதிய கார் மற்றும் பைக் மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகமாகின்றன. அக்டோபரில் பல புதிய கார் மற்றும் பைக்குகள் அறிமுகமாக உள்ளன. அவற்றின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுக தேதி மற்றும் இதர விபரங்களில் மாற்றம் இருக்கலாம். எனவே, கார், பைக் மார்க்கெட் பற்றிய உடனடி தகவல்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்தை பின்தொடருங்கள்.

புதுப்பொலிவுடன் புதிய ஸ்பார்க்:
அக்டோபர் 15ல் புதிய ஸ்பார்க் ரிலீசாகிறது. புதிய ஆல்ட்டோ வருவதால் மார்க்கெட்டை தக்கவைக்க வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது செவர்லே. தற்போதைய அதே 1.0 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது. 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் சலுகைகளுடன் வருகிறது.

புதிய ஆல்ட்டோ 800
வரும் 16ந் தேதி புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகப்படுத்துகிறது. புத்தம் புது வடிவமைப்பு, புதிய எஞ்சின் என புதிய ஆல்ட்டோவில் சகலமும் புதிது. அதிக மைலேஜ், அதிக இடவசதி, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் என வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரூ.2 லட்சம் என்ற விலை பட்டியலில் இணையப் போகும் புதிய ஆல்ட்டோவுக்கு ரூ.5,000 கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம்:
அக்டோபர் 17ல் இரண்டு எஸ்யூவி மாடல்கள் அறிமுகமாகின்றன. அதில் ஒன்று டாடா சஃபாரி ஸ்ட்ராம். பல மாற்றங்களுன் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் டிகோர் எஞ்சினுடன் வரும் புதிய சஃபாரி நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்1 பிளாட்பார்மில் ஆரியா எம்பிவி வடிவமைக்கப்பட்ட நிலையில், புதிய எக்ஸ்2 பிளாட்பார்மில் சஃபாரி ஸ்ட்ராம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மஹிந்திராவின் சாங்யாங் ரெக்ஸ்டன்:
தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டன் எஸ்யூவியை முதலாவதாக இந்தியாவில் அறிமுகம் செய்கிறது மஹிந்திரா. 161 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் எஞ்சினுடன் வரும் புதிய ரெக்ஸ்டன் டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும். ரூ.19 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என தெரிகிறது.

ஆட்டோமேட்டிக் ஹோண்டா பிரியோ
அக்டோபர் 18ல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பிரியோ ஹேட்ச்பேக் காரை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது. தற்போதைய பிரியோவைவிட ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை விலை கூடுதலாக இருக்கும்.

செவர்லே செயில்:
செவர்லேயின் கேம் சேஞ்சர் மாடலாக இருக்கும் என்று செயிலை குறிப்பிடுகின்றனர். தாராள இடவசதியை கொண்டிருக்கும் செயிலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த காரின் பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ.4 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தன்டர்பேர்டு:
வரும் 11ந் தேதி புதிய தன்டர்பேர்டு 500 அறிமுகமாகிறது. ஸ்பிளிட் சீட், புதிய ஹேன்டில்பார், எல்இடி டேஞ்சர் லைட், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் என புதுமைகளை தாங்கி வருகிறது தனடர்பேர்டு 500. புதிய தன்டர்பேர்டில் 27.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.2 லட்சம் விலையில் வருகிறது.


Click it and Unblock the Notifications








