புதிய போலோ அறிமுகம்: கூடுதல் வசதிகள், விலை குறைவு-விபரங்கள்
மேம்படுத்தப்பட்ட போலோ மற்றும் வென்ட்டோ காரை போக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. வடிவமைப்பில் மாற்றங்கள் இல்லையென்றாலும் இரண்டு கார்களின் டாப் வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகளை கொடுத்து, விலையை அதிரடியாக குறைத்துள்ளது போக்ஸ்வேகன்.

ரூ.7.37 லட்சமாக இருந்த டீசல் போலோவின் டாப் வேரியண்ட் விலையை ரூ.6.94 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டீசல் வென்ட்டோ காரின் ஹைலைன் வேரியண்ட்டின் விலை ரூ.10.20 லட்சத்திலிரு்நது ரூ.9.89 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உற்பத்தி செலவீனத்தை கருதி, பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டுகளின் விலையை போக்ஸ்வேகன் சிறிதளவு உயர்த்தியுள்ளது. புதிய போலோ காரின் விலை ரூ.1,500 முதல் ரூ.8,000 வரையிலும், வென்ட்டோ காரின் விலை ரூ.1,500 முதல் ரூ.11,000 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
புதிய போலோவின் சிறப்பம்சங்கள்:
சர்வதேச மாடலில் இருப்பது போன்று கரும்பூச்சு கொண்ட ஹெட்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், லெதர் கவருடன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், கியர் லிவர் மற்றும் ஹேண்ட் பிரேக் லிவரில் லெதல் கவர், ஸ்பீட் சென்சிங் வால்யூம் கன்ட்ரோல், மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை.
பவர் விண்டோஸ், பவர் மிரர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ரியர் வாஷ் வைப்பர் உள்ளிட்ட ஏற்கனவே இருக்கும் வசதிகளுடன் மேற்கண்ட புதிய அம்சங்களுடன் புதிய போலோ வந்திருக்கிறது. போலோ டாப் வேரியண்ட்டை மாருதி ஸ்விப்ட் டாப் வேரியண்ட் காருடன் ஒப்பிடும்போது 18,000 விலை கூடுதலாகவே இருக்கிறது. ஹூண்டாய் ஐ20 அஸ்டாவுடன் ஒப்பிடுகையில், 50,000 வரை விலை குறைவு.
எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினுடன் புதிய போலோ விற்பனைக்கு கிடைக்கும்.
புதிய வென்ட்டோவின் சிறப்பம்சங்கள்:
புதிய வென்ட்டோ டாப் வேரியண்ட்டில் ஸ்டைலான புதிய அலாய் வீல்கள், கரும்பூச்சு கொண்ட ஹெட்லைட்டுகல், 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, புளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆகியவை கூடுதலாக இருக்கிறது.
புதிய வென்ட்டோ டிடிஐ டீசல் வேரியண்ட்டை மிட்சைஸ் கார் மார்க்கெட் லீடரான ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் டீசல் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது 9,000 விலை அதிகம். நிசான் சன்னி டீசல் டாப் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது ஒரு லட்ச ரூபாய் அதிகம்.
இரண்டு கார்களின் டாப் வேரியண்ட்களிலும் கூடுதல் வசதிகளுடன் விலையை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
பழைய விலையுடன் புதிய விலை ஒப்பீட்டு விபரம்:
போலோ:
1.2 டிரென்ட்லைன் பெட்ரோல் : ரூ.4.89 லட்சம்(22,000 கூடுதல்)
1.2 கம்போர்ட்லைன் பெட்ரோல் : ரூ.5.38 லட்சம்(8,000 கூடுதல்)
1.2 ஹைலைன் பெட்ரோல் : ரூ.5.84 லட்சம்(ரூ.40,000 குறைவு)
1.2 டிரென்ட்லைன் டீசல் : ரூ.5.99 லட்சம் (20,000 கூடுதல்)
1.2 கம்போர்ட்லைன் டீசல் : ரூ.6.48 லட்சம் (6,000 கூடுதல்)
1.2 ஹைலைன் டீசல் : ரூ.6.94 லட்சம்( ரூ.43,000 குறைவு)
வென்ட்டோ:
1.6 டிரென்ட்லைன் பெட்ரோல் : ரூ.7.29 லட்சம்(11,000 கூடுதல்)
1.6 கம்போர்ட்லைன் பெட்ரோல் : ரூ.7.75 லட்சம்(11,000 கூடுதல்)
1.6 ஹைலைன் பெட்ரோல் : ரூ8.74 லட்சம்(ரூ21,000 குறைவு)
1.6 ஹைலைன் பெட்ரோல்(ஏடி) : ரூ.9.74 லட்சம்(ரூ.23,000 குறைவு)
1.6 டிரென்ட்லைன் டீசல் : ரூ.8.44 லட்சம் (1,000 கூடுதல்)
1.6 கம்போர்ட்லைன் டீசல் : ரூ.8.91 லட்சம் (1,000 கூடுதல்)
1.6 ஹைலைன் டீசல் : ரூ.9.89 லட்சம்( ரூ.31,000 குறைவு)


Click it and Unblock the Notifications








