ஏலத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பழைய கார்

அதிபராவதற்கு முன்பு இல்லினாய்ஸ் செனட்டராக இருந்த பாரக் ஒபாமா, கிறிஸ்லர் 300சி பிரிமியம் செடான் காரை பயன்படுத்தி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அந்த காரை ஒபாமா பயன்படுத்தி வந்தார்.
இதன்பின்னர், அதிபர் ஒபாமா அந்த காரை விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில், அந்த காரின் தற்போதைய உரிமையாளர் அந்த காரை இ-பே ஏல நிறுவனம் விற்பனை செய்ய உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற இ-பே ஏல நிறுவனம் மூலம் இந்த கார் ஏலம் விடப்பட உள்ளது.
இந்த காருக்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.8 லட்சம் ரூபாய் முன்பணமாக செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெதர் இருக்கைகள், சன்ரூப் மற்றும் விபத்துக்களில் சிக்காத கார் என்று ஏல நிறுவனம் ஒபாமாவின் பழைய கிறிஸ்லர் 300சி காரை பற்றிய தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








