மாருதியின் புதிய வேகன் ஆர்- பெங்களூர் வாசகர் தரும் ஸ்பெஷல் ரிவியூ

அந்த வகையில், மாருதி வேகன் ஆர் குடும்பத்தில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ரம்யா, சமீபத்தில் தான் வாங்கிய மாருதி வேகன்-ஆர் கார் பற்றிய அனுபவங்கள் மற்றும் சிறப்பம்சங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பெங்களூரிலுள்ள கல்யாணி மாருதி ஷோரூமில்தான் இந்த புதிய மாடல் வேகன் ஆரை வாங்கினேன். ஸ்விப்ட், ஃபோர்டு பிகோ மற்றும் வேகன்-ஆர் ஆகிய கார்கள் எனது தேர்வு பட்டியலில் இருந்தது. ஆனால், எனது பட்ஜெட் 5 லட்சம் என்பதால், பெட்ரோல் மாடல் வேகன் ஆரை தேர்வு செய்தேன்.
எனது பட்ஜெட்குள்ளாகவே ரூ.4.6 லட்சத்தில் வேகன்-ஆரை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டதால் எனது சந்தோஷம் இரட்டிப்பானது. அதிக மைலேஜ், அருமையான வடிவமைப்பு, சொகுசு ஆகியவை வேகன் ஆர் பக்கம் என்னை இழுத்துவிட்டது.
எனது முதல் கார் என்பதுடன் ஆராய்ந்து அலசி பார்த்து வாங்கியதால் குறையொன்றும் எனக்கு புலப்படவில்லை. மாறாக வேகன் ஆர் உரிமையாளரானதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.
மேலும், இந்த காரை லோனில்தான் வாங்கினேன். ஸ்டேட் பேங்கில் கடன் பெற்றேன். ஆனால், இவ்வளவு சுலபமாக கார் கடன் பெறுவேன் என்று நினைத்து்ககூட பார்க்கவில்லை. எல்லாம் எளிமையாகவும், சிறப்பாகவும் முடிந்ததில் பெரும் நிம்மதியாக இருக்கிறது.
எனது முதல் கார் இதுதான் என்பதால் பெங்களூரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.இருக்கை அமைப்பை பற்றி கூறியாக வேண்டும். அதிக உயரம் கொண்டவர்கள் கூட வேகன் ஆரில் உட்கார்ந்தால் தலை தட்டாது.
வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் மெது மெதுவாக ஊர்ந்து சென்றாலும் அலுப்பில்லாமல் ஓட்டும் வகையில், இதன் ஸ்டீயரிங் மற்றும் இருக்கை அமைக்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் கார் என்பதால் அதிக சப்தமில்லாமல் செல்வதால், பயணிப்பதே தெரியவில்லை. கார் வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறது என்பதாலும், அலுவலக பணிகள் காரணமாகவும் இதுவரை நீண்ட தூர பயணங்கள் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை.
நீண்ட தூர பயணங்கள் சென்று வந்தால், மைலேஜ் விபரங்கள் குறித்து நிச்சயம் டிரைவ்ஸ்பார்க் டீமிடம் தெரிவிப்பேன். மைலேஜ் குறித்து இதுவரை செக்கப் செய்யவில்லை. மைலேஜ் விபரங்களையும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக கூறுகிறேன் என்று கூறி விடை பெற்றார்.


Click it and Unblock the Notifications








