தமிழகத்தில் 1.5 கோடி வாகனங்கள்: 5ல் ஒருவரிடம் வாகனம்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 1.5 கோடியை தாண்டியுள்ளது. மேலும், 5ல் ஒருவரிடம் ஒரு வாகனம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், இதுவரை பதிவு செய்யப்ட்டுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.5 கோடியை தாண்டியுள்ளது.

Vehicle Population

கடந்த 2011-12ம் நிதியாண்டில் 17 லட்சம் வாகனங்கள் தமிழக போக்குவரத்து துறையில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 14 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் சென்னையில் மட்டும்் 37 லட்சம் வாகனங்கள் ஓடுவதாக அந்த புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் சென்னையில் மட்டும் 3 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓடும் மொத்த வாகனங்களில் 82.3 சதவீதம் (1.26 கோடி) இரண்டு சக்கர வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதிஆண்டில் தமிழகத்தில் 1.12 கோடி இரு சக்கர வாகனங்கள் இருந்தன.

More from DriveSpark

Article Published On: Monday, April 30, 2012, 12:54 [IST]
English summary
Vehicle population crosses 1.5 crore mark in Tamilnadu. Every fifth person in Tamil Nadu owns a vehicle, In Total 17 lakh vehicles registered last financial year, 14 lakh of them were two-wheelers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+