ஜிலு ஜிலு பயணத்திற்கு புதிய குளு குளு பைக் சீட் கவர்!

மும்பையை சேர்ந்த வினைராயல் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. மாருதி, டொயோட்டோ மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளையராக வினைராயல் உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக குளு குளு வசதி தரும் பைக்குகளுக்கான சீட் கவரை வினைராயல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடுமையான கோடையிலும் பைக்கின் சீட்டை 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே வைத்திருக்கும் தொழில்நுட்பத்துடன் இந்த புதிய சீட் கவர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பைக்கில் உட்கார்த்து போகும்போது ஓர் புதிய அனுபவத்தை பெறலாம் என்று வினை ராயல் அடித்து கூறுகிறது. தவிர, இந்த சீட் கவருக்கு 3 ஆண்டுகள் வாரண்டியையும் வினை ராயல் வழங்குகிறது.
நீடித்து உழைக்கும் தரத்துடன் தயாரிக்கப்படுவதால், 3 ஆண்டுகளுக்கு சீட் கவர் மாற்ற வேண்டியிருக்காது. இதன்மூலம், ஒரு பைக் உரிமையாளர் 3 முதல் 4 கிலோ தோல் கழிவை மிச்சப்படுத்துவார் என்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை இந்த சீட் கவர் தடுக்கிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
மார்க்கெட்டில் விற்கப்படும் பைக் சீட் கவர்களின் விலையை விட 50 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்கினாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று வினை ராயல் தனது கூல் சீட் கவருக்கு சர்டிபிகேட் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








