அடுத்த 2 ஆண்டுகளில் 2 புதிய கார் மாடல்கள்: போக்ஸ்வேகன் அறிவிப்பு

டூரக் எஸ்யூவி
அடுத்த இரு ஆண்டுகளில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் ரக கார்களை சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு்க்குள் இந்த இரண்டு புதிய மாடல்களும் மார்க்கெட்டுக்கு வ்நதுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் எஸ்யூவி 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும்.

ரூ.10 லட்சத்துக்குள் வரும் இந்த புதிய எஸ்யூவி ரினால்ட் டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியை கொடுக்கும். இதேபோன்று, மற்றொரு கிராஸ்ஓவர் ரக கார் பஸாத் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படுகிறது. இந்த காரில் 7 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும்.

போலோ, வென்ட்டோ கார்கள் மட்டுமே தற்போது போக்ஸ்வேகனுக்கு ஓரளவு விற்பனையில் ஆறுதல் தந்து வருகிறது. ஆனால், கடும் சந்தை போட்டி காரணமாக இந்த இரண்டு கார்களின் விற்பனையிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் புதிய கார்களை போக்ஸ்வேகன் அறிமுகப்படுத் இருக்கிறது.இந்த இரண்டு புதிய கார்களும் போக்ஸ்வேகனின் மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்தும் என மார்க்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2012, 15:09 [IST]
English summary
German car maker Volkswagen has confirmed that it will indeed build two new products, in the form of a compact SUV and a 7 seat crossover. Both the products are expected to be based on existing Volkswagen cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+