கார் ஆலைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த வோக்ஸ்வேகன் திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக திகழ்கிறது. ஆடி, புகாட்டி, ஸ்கோடா, லம்போர்கினி, மேன் டிரக்ஸ், சீட் என ஏராளமான கார் நிறுவனங்கள் வோக்ஸ்வேகனின் துணை நிறுவனங்களாக செயல்படுகின்றன.
மேலும், ஐரோப்பா மட்டுமின்றி சர்வதேச அளவில் கார் உற்பத்தியில் அந்த நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டோவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது வோக்ஸ்வேகனுக்கு உலகம் முழுவதும் 39 கார் ஆலைகள் உள்ளது.
இந்த நிலையில், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வரும் அந்த நிறுவனம் தனது கார் ஆலைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தனது கார் உற்பத்தியை உயர்த்துவதன் மூலம், உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்று நம்புகிறது.


Click it and Unblock the Notifications








