குட்டி டீசல் எஞ்சினுடன் அப் காரை களமிறக்க போக்ஸ்வேகன் திட்டம்

போக்ஸ்வேகன் அப்
புதிய 2 சிலிண்டர்கள் கொண்ட சிறிய ரக டீசல் எஞ்சினை போக்ஸ்வேகன் உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் டைகுன் கான்செப்ட் எஸ்யூவியை போக்ஸ்வேகன் பார்வைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் போக்ஸ்வேகன் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் உல்ரிச் ஹேக்கன்பெர்க் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் முக்கிய தகவல் ஒன்றையும் தெரிவித்தார். சிறிய ரக டீசல் எஞ்சின் ஒன்றை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். 2 சிலிண்டர்கள் கொண்ட இந்த குட்டி எஞ்சின் அப், டைகுன் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்எல்-1 என்ற காரை போக்ஸ்வேகன் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த கார் லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காரி்ல பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சின் அடிப்படையில்தான் இந்த புதிய டீசல் எஞ்சினை வடிவமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, இந்த புதிய எஞ்சின் சாலை நிலைகளில் லிட்டருக்கு 30 கிமீ வரை செல்லும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அப் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த புதிய டீசல் எஞ்சினுடன் அப் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக மைலேஜ் தரும் என்பதால் நிச்சயம் அப் காருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது. போக்ஸ்வேகன் மட்டுமல்லாது டாடா, மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் லிட்டருக்கு 30 கிமீ வரை மைலேஜ் தரும் புதிய டீசல் எஞ்சின்களை வடிவமைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 29, 2012, 10:29 [IST]
English summary
German auto giant Volkswagen is working on a 2 cylinder diesel engine for the Up, and it shall be introduced in international market by 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+