செய்தித்தாளில் வைபரேட்டர் பொருத்தி அதிர வைத்த போக்ஸ்வேகன்!

இன்று காலை இரு முன்னணி செய்தித்தாள்களை படித்த வாசகர்களுக்குத்தான் இந்த ஏடாகுட அனுபவம். செய்தித்தாளின் கடைசி பக்கத்தை திறந்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த வைப்ரேட்டர் கருவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வாசகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனது புதிய போலோ மற்றும் வென்ட்டோ கார்களை பிரபலப்படுத்தும் விதமாக போக்ஸ்வேகன் நிறுவனம்தான் அந்த விளம்பரத்துக்கு கைங்கர்யம் செய்திருந்தது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவில் பிரபலத்தைத் தேடித்தரும் என நினைத்துக் கொண்டு போக்ஸ்வேகனும், செய்தித்தாள் நிறுவனங்களும் வைப்ரேட்டரை பொருத்தி இருந்தன.
ஆனால், காலங்காத்தாலே செய்தித்தாள்களை வாசித்த பல வாசகர்கள் மூட் அவுட் ஆயினர். எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த விளம்பரத்துக்காக ரூ.5 கோடியை போக்ஸ்வேகன் செலவிட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications








