விற்பனை மந்தம்: தீர்வு காண தவிக்கும் வோக்ஸ்வேகன்

Volkswagen Up
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என வோக்ஸ்வேகன் கவலை தெரிவி்த்துள்ளது. விற்பனை மந்தத்துக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

கடந்த ஆண்டு 78,281 கார்களை வோக்ஸ்வேகன் மொத்தமாக விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டைவிட இது 51.68 சதவீதம் கூடுதல். ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வோக்ஸ்வேகனுக்கு சாதகமாக இருக்கவில்லை.

ஸ்கோடா ரேபிட், நிசான் சன்னி ஆகிய கார்களின் வரவால் வென்ட்டோ காரின் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருந்த வோக்ஸ்வேகன் வென்ட்டோ தற்போது 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஸ்விப்ட், புதிய ஐ20 ஆகிய கார்களும் வோக்ஸ்வேகன் போலோவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது வோக்ஸ்வேகன் நிறுவனத்தை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சர்வீஸ் வசதியில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகாரி நீரஜ் கர்க் கூறுகையில்," எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சி பெறவில்லை. இது எங்களுக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தீர்வு காணப்படும். சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சர்வீஸ் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களும் பழைய மாடல்களை மேம்படுத்தியும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்து வருகின்றன.

எனவே, வோக்ஸ்வேகனின் மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியதாலும் விற்பனை குறைய காரணமாக இருக்கலாம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், அப் போன்ற சிறிய கார் மாடலை அந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்தால்தான் இந்திய மார்க்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டும். அப் வந்தால்தான் வோக்ஸ்வேகனுக்கு இனி 'அப்' கிடைக்கும் போலிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 26, 2012, 14:55 [IST]
English summary
Volkswagen India today said that it was looking into the reasons for falling sales in the country. The number of sales of the car maker has been seeing a decline since January this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+