மாருதி போன்று யூஸ்டு கார் விற்கப் போகும் வோக்ஸ்வேகன்

புதிய கார்கள் விற்பனைக்கு இணையாக நம் நாட்டில் யூஸ்டு கார்கள் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், பல முன்னணி கார் நிறுவனங்கள் யூஸ்டு கார்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகின்றன.
மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் யூஸ்டு கார் விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த வரிசையில், தற்போது ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனமும் இணைய உள்ளது.
அடுத்த ஓரிரு மாதங்களில் யூஸ்டு கார் நிறுவனத்தை வோக்ஸ்வேகன் துவங்க உள்ளது. இதற்காக, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் 12 யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்க உள்ளது. யூஸ்டு கார் நிறுவனத்தை துவங்குவதற்கான பணிகளை அந்த நிறுவனம் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








