கூடுதல் வசதிகளுடன் புதிய டீசல் வேரியண்ட் வென்ட்டோ: வோக்ஸ்வேகன் அறிமுகம்

Volkswagen Vento
ஸ்கோடா ரேபிட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், கூடுதல் அம்சங்களுடன் புதிய டீசல் வேரியண்ட் வென்ட்டோவை வோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் வோக்ஸ்வேகன் வென்ட்டோ நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. இந்த நிலையில், வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ கடந்த ஆண்டு வென்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ரேபிட் செடான் காரை அறிமுகம் செய்தது.

வென்ட்டோவை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேபிட் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கடந்த மாதம் கார் விற்பனையில் வென்ட்டோவை பின்னுக்குத் தள்ளியுள்ளது ரேபிட்.

தனது பங்காளியான ரேபிட்டால் வென்ட்டோவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உணர்ந்து கொண்ட வோக்ஸ்வேகன் தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய டீசல் வேரியண்ட் வென்ட்டோவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பாடி கலர் வெளிப்புற கதவு கைப்பிடிகள் மற்றும் மிரர்கள், ரேடியோ, எம்பி 3 பிளேயர் மியூசிக் சிஸ்டம், பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் வசதி, முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் பனி விளக்குகள், உயரத்தை கூட்டி குறைக்கும் வசதியுடன் டிரைவர் சீட், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட ஆட்டோ ரியர் வியூ மிரர் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் வென்ட்டோ டிரென்டு லைன் வேரியண்ட்டில் கிடைக்கும்.

இந்த புதிய வென்ட்டோ மஹாராஷ்டிராவில் ரூ.8.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், நாட்டின் பிற பகுதிகளில் ரூ.8.74 லட்சத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 13, 2012, 11:39 [IST]
English summary
German car giant Volkswagen has introduced new diesel varinat Vento car at Rs.8.74 lakhs ex showroom price in India. The new variant variant loaded with more new features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+