800 சிசி எஞ்டினுடன் புதிய குட்டிக் காரை களமிறக்கும் வோக்ஸ்வேகன்

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோக்ஸ்வேகன் நம் நாட்டு மார்க்கெட் மூலம் தனது விற்பனை வளர்ச்சியை உயர்த்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதற்கு தக்கவாறு புதிய மாடல்களையும், பெரும் முதலீட்டையும் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு புதிய 800 சிசி காரை வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அப் ஹேட்ச்பேக் கார் பேஸ் மாடலில் வடிவமைக்கப்படும் இந்த புதிய கார் பாரீஸ் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் உள்ளிட்ட கார்களுக்கு இந்த புதிய கார் கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய காரை ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலை பட்டியலுக்குள் இருக்குமாறு வோக்ஸ்வேகன் பார்த்துக்கொள்ளும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








