ஐபிஎல் ஜுரம்: அறிமுமாகிறது ஸ்பெஷல் எடிசன் போலோ, வென்ட்டோ

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிகளை வைத்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் முயற்சிகளை தற்போது துவங்கியுள்ளன.
அந்த வகையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிசன் போலோ மற்றும் வோக்ஸ்வேகன் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பிரதிபலிக்கும் கூடுதல் அம்சங்களுடன் வருகிறது.
மல்டிமீடியாக கார் பேட், டியூவல் டோன் லெதர் சீ்ட் இருக்கைகள், ஸ்பெஷல் ஃப்ளோர் மேட், டோர் சில் டிசைன், காரின் பின்பக்கத்தில் ஐபிஎல் பிராண்டு முத்திரையுடன் இந்த இரண்டு கார்களும் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ காரை மட்டும் வோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வந்தது.
ஆனால், இந்த ஆண்டு போலோ ஹேட்ச்பேக் காரின் ஐபிஎல் ஸ்பெஷல் எடிசன் காரையும் விற்பனைக்கு கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








