விரைவில் அறிமுமாகிகிறது போக்ஸ்வேகனின் புதிய டூரக் எஸ்யூவி

By Saravana

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய டூரக் எஸ்யூவியை விரைவில் இந்திய மார்க்கெட்டில் களமிறக்குகிறது போக்ஸ்வேகன்.

போக்ஸ்வேகனின் புதிய டூரக் எஸ்யூவி தற்போதைய மாடலைவிட 40 மிமீ கூடுதல் நீளமும் கொண்டதாக இருக்கும். அதேவேளை, பழைய மாடலைவிட 200கிலோ எடை குறைவானதாக இருக்கும்.

New Toureq
இந்த புதிய டூரக்கில் 236 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். தவிர, 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

புளூடூத் ஆடியோ சிஸ்டம், மெமரியுடன் கூடிய பவர் இருக்கைகள், டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, டூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் என பல நவீன வசதிகளோடு வருகிறது புதிய டூரக்.

கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் கண்ணாடி கூரை, பேடில் ஷிப்ட்டர்ஸ், ஆட்டோமேட்டிக் ஸினான் ஹெட்லைட்டுகள் என ஏரளாமான வசதிகளை புதிய டூரக் கொண்டிருக்கும். நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பின் வரிசை இருக்கை அதிக இடவசதிகொண்டதாக மாறி இருக்கிறது.

காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும். 2135 கிலோ எடை கொண்ட புதிய டூரக் கையாளுமை, கட்டுமானம் என அனைத்திலும் சிறப்பாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 உள்ளிட்ட பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் இந்த புதிய டூரக் இந்திய மார்க்கெட்டில் ரூ.58.4 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 17, 2012, 15:14 [IST]
English summary
Volkswagen India to launch new Toureq premium suv in Indian market soon. The company may price the New Touareg at around Rs 58.4 lakh (ex-showroom,Mumbai)sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+