அப் கார் அறிமுகத்தை தாமதப்படுத்தும் போக்ஸ்வேகன்

ரூ.4 லட்சத்தில் புத்தம் புதிய அப் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு அப் கார் இந்தியா வந்துவிடும் என தகவல்கள் பரபரத்தன.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதில் போக்ஸ்வேகனுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள மஹராஷ்டிராவில் உள்ள ஆலையை விரிவுபடுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், மாநில அரசிடமிருந்து ஆலை விரிவாக்கத்துக்கான போதிய ஒத்துழைப்பும், சாதகமான பதில்களும் இல்லை. எனவே, ஆலையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது போக்ஸ்வேகன். இந்த நிலையில், அப் காரை அறிமுகப்படுத்துவது சிறப்பாக இருக்காது என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
இதனால், இந்தியாவில் அப் காரின் அறிமுகத்தை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக போஸ்க்வேகன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்ஸ்வேகன் போன்றே ஃபோர்டு, ஃபியட் ஆகிய நிறுவனங்களும் புதிய குட்டிக் கார்களின் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








