கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த போக்ஸ்வேகன் முடிவு

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் அனைத்து கார் நிறுவனங்களின் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளது. இதனால், வருவாயில் அந்த நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதனால், கார்களின் விலையை உயர்த்துவது குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. டொயோட்டா அண்மையில் கார்களின் விலையை 1.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது.
இந்த நிலையில், போக்ஸ்வேகன் நிறுவனமும் விலை உயர்வை கையிலெடுக்க உள்ளது. போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விலையை ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை உயர்த்துவதற்கு போக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.
இந்த இரு மாடல்களும்தான் போக்ஸ்வேகன் விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வரும் மாடல்கள்.எனவே, இந்த கார் மாடல்களை பண்டிகை காலத்தில் வாங்க திட்டமிட்டுள்ளோர் முன்கூட்டியே வாங்கினால், விலை உயர்விலிருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








